×

வீட்டு வாசலில் உட்கார்ந்து கல்வி பயிலும் பள்ளி மாணவர்கள்

 

பாலக்கோடு, நவ.8: பாலக்கோடு அருகே கூத்தாண்டஅள்ளியில் வீட்டு வாசலில் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த கூத்தாண்டஅள்ளி கிராமத்தில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வந்தது. இந்நிலையில், பள்ளி கட்டிடம் பழுதடைந்ததால், புதிய கட்டிடம் கட்டுவதற்காக, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.

இதனால், தற்காலிகமாக தனிநபர் வீட்டு வாசலில் 45 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர். புதிய பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்தும் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை என அதிகாரிகள் மீது பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். தற்காலிகமாக பாடம் நடத்தப்படும் தனிநபர் வீட்டில் குழந்தைகளுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. கல்வி கற்க ஏற்ற சூழலும், பாதுகாப்போ இல்லாத இடத்தில் மாணவர்கள் படித்து வருவதால், உடனடியாக புதிய பள்ளி கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வீட்டு வாசலில் உட்கார்ந்து கல்வி பயிலும் பள்ளி மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Palakodu ,Koothandaalli ,Katti ,Dinakaran ,
× RELATED டூவீலர்கள் மோதி பழ வியாபாரி பலி